சென்னையில் மகளிர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார்.அமைச்சர் ஜெகதீஸ்வரி, இன்றைய சட்டப்பேரவையில் கலந்துகொள்ள விருதுநகரில் இருந்து சென்னை நோக்கி இன்று (செப். 7) அதிகாலையில் அரசு வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். அவரது குடும்பத்தினரும் அமைச்சருக்கு சொந்தமான மற்றொரு வாகனத்தில் உடன் வந்துகொண்டிருந்தனர்.இந்த நிலையில், சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் பகுதி அருகே வந்துகொண்டிருந்தபோது, அமைச்சர் ஜெகதீஸ்வரியின் குடும்பத்தினர் பயணித்த கார், இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இறையன்பு (26) சம்பவ இடத்திலேயே பலியானார்.இதனையடுத்து, விபத்தை ஏற்படுத்திய அமைச்சரின் சொந்த வாகனத்தைக் கைப்பற்றி, போக்குவரத்துக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக அதிவேகமாக மற்றும் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியதாக இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே, காரை ஓட்டி வந்த சின்ன அக்னியை காவல்துறையினர் கைது செய்தனர். சட்டப்பேரவையில் இன்று விவாதம் இருக்காது: ஜேசிடி பிரபாகர்Youth killed in accident involving Minister Jagadeeswari's car in Chennai