இன்றைய செய்திகள் செப். 7 - நேரலை!

Wait 5 sec.

மேட்டூர் அணை நீர் திறப்பு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்புமேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணை நீர் திறப்பு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு சென்னையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி கார் மோதி இளைஞர் பலி; ஓட்டுநர் கைதுசென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலியானார். இதனையடுத்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஓட்டுநர் சின்ன அக்னியை கைது செய்தனர்.சென்னையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி கார் மோதி இளைஞர் பலி; ஓட்டுநர் கைதுபேரவையில் மக்கள் பிரச்னைகளை முதல்வர் இன்று பேசுகிறாரா?இன்றைய சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரை வழங்கவுள்ள நிலையில், மக்களின் பிரச்னைகள் குறித்தும் அவர் பேசுவார் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.மக்களுக்கான அரசு! பேரவையில் மக்கள் பிரச்னைகளை முதல்வர் இன்று பேசுகிறாரா?பணக்கார விநாயகர் சிலைக்கு ரூ. 703.27 கோடி காப்பீடு!வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மும்பையில் ஜிஎஸ்பி சேவா மண்டல் நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலை மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில்கொண்டு, ரூ. 703.27 கோடிக்கு காப்பீடு எடுக்கப்பட்டுள்ளது. பணக்கார விநாயகர் சிலைக்கு ரூ. 703.27 கோடி காப்பீடு!சட்டப்பேரவையில் இன்று விவாதம் இருக்காது: ஜேசிடி பிரபாகர்இன்றைய சட்டப்பேரவைத் தொடரில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை குறித்த முதல்வர் விஜய்யின் பதிலுரைக்குப் பிறகு விவாதம் இருக்காது என பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் இன்று விவாதம் இருக்காது: ஜேசிடி பிரபாகர்