சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப்.7) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

Wait 5 sec.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப்.7) எந்தெந்த வழக்குகள் விசாரணை?சி. விஜயபாஸ்கர் ரூ.5 கோடி பெற்றதாக அதிமுக வேட்பாளர் தனவிமல் தொடர்ந்த வழக்கு, வைகோ தொடர்ந்த வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப். 7) விசாரணைக்கு வருகின்றன.1. எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.2. கோயில் திருவிழாக்களில் யானைகளைப் பயன்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கும் விசாரிக்கப்பட உள்ளது.3. தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதித்து டிஜிபி பிறப்பித்த சுற்றறிக்கக்கு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணையும் இன்று நடைபெறுகிறது. 4. 2019-ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட 1 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக வைகோ தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை செய்யப்பட உள்ளது. 5. சி. விஜயபாஸ்கர் ரூ.5 கோடி பெற்றதாக அதிமுக வேட்பாளர் தனவிமல் தொடர்ந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வருகிறது. மேட்டூர் அணை நீர் திறப்பு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு