நொய்டாவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது மீரட்..! லக்னௌவை பழிவாங்குமா?

Wait 5 sec.

யுபி டி20 லீக்கின் குவாலிஃபயர் 2 ஆட்டத்தில் மீரட் மாவேரிக்ஸ் அணி நொய்டா சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியுடன் மீரட் மாவேரிக்ஸ் அணி குவாலிஃபயர் 1 ஆட்டத்தில் தன்னை வென்ற லக்னௌ ஃபால்கோன்ஸ் உடன் இறுதிப் போட்டியில் மோதவிருக்கிறது. யுபி டி20 லீக்கின் குவாலிஃபயர் 2 ஆட்டத்தில் மீரட் மாவேரிக்ஸ் - நொய்டா சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மீரட் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நொய்டா சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 134/8 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சௌர்யா சிங் 47, மாதவ் கௌசிக் 36 ரன்கள் எடுக்க, கேப்டன் பிரசாந்த வீர் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். மீரட் சார்பாக பந்துவீச்சில் ஜீசன் ஹன்சாரி, யஷ் கர்க் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். அடுத்து பேட்டிங் செய்த இந்த அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வென்றது. இந்த அணியில் அதிகபட்சமாக யஷ் கர்க் 56*, கேப்டன் ரிங்கு சிங் 37* ரன்கள் எடுத்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் போட்டியை வென்று கொடுத்தார்கள். இறுதிப் போட்டியில் லக்னௌ அணியை பழி வாங்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. View this post on Instagram தனியாக ஆற்றைச் சுத்தம் செய்த மாணவருக்கு பன்னாட்டு அங்கீகாரம் தேவை: பீட்டர்சன்UPT20 Meerut Mavericks going to final against Lucknow Falcons