காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டில் அமைந்துள்ள ராமானுஜருக்கு ஆவணி மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்புத் திருமஞ்சனமும்,வெள்ளிக்கவச அலங்காரமும், தீபாராதனைகளும் நடைபெற்றது. ராமானுஜரின் அவதார நட்சத்திரமான திருவாதிரையையொட்டி மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனமும், வெள்ளிக்கவச அலங்காரமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னா் பக்தா்களுக்கு தீா்த்தம் மற்றும் அன்னப்பிரசாதமும் வழங்கப்பட்டது.திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.