இரும்புக் கம்பியில் சிக்கிய யானைக்கு சிகிச்சை! இரவுப் பகலாக பணியாற்றிய வனத்துறை!

Wait 5 sec.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம், கோவை வனக்கோட்டம், சிறுமுகை வனச்சரகம், பெத்திக்குட்டை பிரிவு, நீலகிரி கிழக்குச் சரிவு காப்பு காடு, உளியூர் காவல் சுற்று வனப்பகுதியில் பெண் யானை ஒன்றின் இடது முன்னங்காலில் இரும்பு கம்பி சிக்கி காயமடைந்திருந்தது கண்டறியப்பட்டது.மாவட்ட வன அலுவலர், கோவை வனக் கோட்டம், கோவை அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து கோவை தலைமை வனப் பாதுகாவலர் ஆனைமலை புலிகள் காப்பகம் மூலம் சென்னை முதன்மை தலைமை வன உயிரின காப்பாளர் அவர்களின் உத்தரவின்படி மாவட்ட வன அலுவலர், கோவை வனக்கோட்டம் அவர்கள் தலைமையில், சிறுமுகை வனச்சரக அலுவலர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் முன்னிலையில் ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த ஐந்து வன கால்நடை மருத்துவர்கள் குழுவின் மூலம் 60 வனப்பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றி யானைக்கு சிகிச்சையளிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இந்தப் பணியில், யானை பாகன்கள் மற்றும் யானையின் இருப்பிடத்தைக் கண்டறிய நவீன ட்ரோன் கேமரா கொண்ட குழுவின் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு நேற்று பெண் யானையை வனப்பகுதியிலேயே மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.யானையின் காலில் இருந்த காயத்துக்கு மருந்து தடவி சிகிச்சைக்குப் பின் மயக்கம் தெளிந்ததும் நல்ல முறையில் யானை வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. எனினும், வனத்துறையினர், யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து அதன் உடல் நலனைக் கவனித்து வருகிறார்கள்.