நடிகை மாளவிகா மோகன் நடிகை த்ரிஷா குறித்து பேசியது கவனம் பெற்றுள்ளது.நடிகை நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து, மாஸ்டர், தங்கலான், ஹிருதயப்பூர்வம் ஆகிய வெற்றிப் படங்களில் நடித்திருந்தார். இதனால், மலையாளம், தமிழிலும் முன்னணி நடிகையாக பிரபலமடைந்துள்ளார்.தற்போது, சர்தார் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகை மாளவிகா மோகனன், “பேட்ட திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது நான் சினிமாவுக்கு புதிது. அப்போது, நடிகை த்ரிஷாவுடன் சில காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது. அவர் மிகவும் இனிமையானவர். சூழலைப் புரிந்துகொண்டு என்னை இலகுவாக வைத்திருந்தார். நாங்கள் வாரணாசியில் படப்பிடிப்பில் இருந்தபோது இருவரும் இணைந்து வெளியே சென்று வருவோம். விஜய் சாருடன் மாஸ்டரில் நடிக்க ஒப்பந்தமானதும், த்ரிஷா, ‘ஹாய் பேபி. உன்னை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது மிகப்பெரிய வாய்ப்பு. வாழ்த்துகள்’ எனக் குறுஞ்செய்தி அனுப்பினார். இதைச் சொல்வதற்கு நல்ல மனது வேண்டும்.” எனக் கூறியுள்ளார். தனக்குப் பிடித்த சிறந்த நடிகைகளில் ஒருவர் த்ரிஷா என சில நாள்களுக்கு முன் மாளவிகா மோகனன் கூறியது குறிப்பிடத்தக்கது. 25-வது முறை... ராமராஜன் திரைப்படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா!Actress Malavika Mohanan's comments about actress Trisha have garnered attention.