துலீப் கோப்பை இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டலம் அணியின் கேப்டன் இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசி அசத்தினார்.துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கிழக்கு மண்டலம் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.ஆட்டத்தின் இரண்டாம் நாளான இன்று தேநீர் இடைவேளையின்போது, கிழக்கு மண்டலம் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 626 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.Ishan Kishan brings up his 2️⃣0️⃣0️⃣ in style What a magnificent knock from the East Zone captain so far Scorecard ▶️ https://t.co/KQf5Km69nk#DuleepTrophy | #SZvEZ pic.twitter.com/2NaE6qG4VK— BCCI Domestic (@BCCIdomestic) September 7, 2026மிகவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசி அசத்தினார். அவர் 301 பந்துகளில் 250 ரன்கள் எடுத்து ரிட்டையர்டு ஹர்ட் ஆனார். அதில் 27 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, குமார் குஷாக்ரா 101 ரன்கள், ஷிகார் மோகன் 85 ரன்கள், அபிமன்யு ஈஸ்வரன் 72 ரன்கள் எடுத்தனர். அனுகுல் ராய் 45 ரன்கள், வைபவ் சூர்யவன்ஷி 44 ரன்கள் எடுத்தனர்.தெற்கு மண்டலம் தரப்பில் திரிபுரனா விஜய் மற்றும் சமா வி மிலிண்ட் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஷேக் ரஷீத் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.East Zone captain Ishan Kishan dazzled by smashing a double century in the Duleep Trophy final.சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஷஃபாலி வர்மா புதிய சாதனை!