பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் உலகத் தரம் வாய்ந்த ரூ. 3,200 கோடியில் சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ரூ.35,062 கோடியில் 7 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகி உள்ளன. இதன்மூலம் 14,790 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தொழில், பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்த தமிழ்நாடு தொழில் கொள்கை வெளியிடப்படும். முதலீட்டாளா்களுக்காக தமிழ்நாடு தொழில்திறன் விவரப் பட்டியல் உருவாக்கப்படும். பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் உலகத் தரத்துடன் ரூ. 3,200 கோடியில் சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் விண்வெளி தொழில்முதலீட்டு மண்டலமாக அறிவிக்கப்படும். அறிவகம் என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தாக்க நகரம் உருவாக்க ரூ. 5 கோடி ஒதுக்கப்படும். ஒட்டுமொத்தமாக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறைக்கு ரூ.4,414 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.