சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் என். ஆனந்த்துடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் நேரில் சந்தித்துப் பேசினர்.தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி அணிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, இரு அணிகளாகப் பிரிந்தனர்.பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், எடப்பாடி பழனிசாமியுடன் சமரசம் ஏற்பட்டதாக எஸ்.பி. வேலுமணி அணியினர் தெரிவித்தனர்.ஆனால், சி.வி. சண்முகம் சமரசத்துக்கு வராத நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தங்களின் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.இதனிடையே, அதிமுகவில் பறிக்கப்பட்ட பதவிகள் மீண்டும் வழங்கப்படவில்லை என எஸ்.பி. வேலுமணி தரப்பினர் மீண்டும் இபிஎஸ்ஸுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். மேலும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் இணைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் முடிந்தவுடன், அமைச்சரும் தவெக பொதுச் செயலருமான என்.ஆனந்த் அறைக்குச் சென்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.முன்னாள் அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களுமான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகம் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.இதுவரை அதிமுகவின் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.S.P. Velumani and C.V. Shanmugam's faction meets Minister Anand!தமிழக வேளாண் பட்ஜெட்! வெள்ளைத் தங்கம் உற்பத்தியை ஊக்குவிக்க இயக்கம்!