முன்பதிவில் சாதனை படைத்த சாம்சங் கேலக்ஸி இசட்!

Wait 5 sec.

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி இசட் வரிசை ஸ்மார்ட்போன்கள் ஆக. 7 ஆம் தேதி (நாளை) வெளியாகவுள்ளன. இதனையொட்டி கேலக்ஸி இசட் ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. சாக்சங் நிறுவனத்தில் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 8, இசட் ஃபோல்ட் அல்ட்ரா ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளன. இந்த இசட் வரிசை ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு அமெரிக்காவில் மட்டும் 30 சதவிகிதத்தைத் தாண்டியுள்ளது. குறிப்பாக கேலக்ஸி இசட் ஃபோல்ட் 8 ஸ்மார்ட்போன், முன்பதிவை பாதிக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். ஃபிளிப் மாடல் ஸ்மார்ட்போன் பயனர்கள் பலரும் தற்போது மடிக்கக் கூடிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை விரும்புபவர்களாக உள்ளனர். இதன் காரணமாக சாம்சங் கேலக்ஸி இசட் வரிசை ஸ்மார்ட்போனின் முன்பதிவு முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.இதுமட்டுமின்றி ஆப்பிள் நிறுவனத்தில் விரைவில் வெளியாகவுள்ள ஐபோன் அல்ட்ரா ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் தோற்றம் மற்றும் அம்சங்களை பிரதிபலிப்பதால் கேலக்ஸி இசட் ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் முன்பதிவு அதிகரித்துள்ளது. அதிகம் விற்பனையாகும் 10 காா்கள் பட்டியலில் மாருதி சுஸுகியின் 8 மாடல்கள் இடம்பிடிப்புSamsung Galaxy Z sets a record in pre-orders