டேர் டெவில் திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது?

Wait 5 sec.

நடிகர் அஜித் குமார் நாயகனாக நடிக்கும் டேர் டெவில் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லியைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிப்பது உறுதியானது. ஆனால், அப்படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகளாக ஏகே - 64 அறிவிக்கப்படாமல் இருந்தது.ரசிகர்களின் பல மாதக் காத்திருப்புக்குப் பின் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, படத்திற்கு டேர் டெவில் (dare devil) எனப் பெயரிட்டுள்ளதாகவும் நடிகையும் அஜித்தின் மனைவியுமான ஷாலினி இதனைத் தயாரிக்க உள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர்.பிரேவ் ஹார்ட்ஸ் புரடக்‌ஷன்ஸ் என்கிற பெயரில் ஷாலினி அஜித்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் அஜித் தற்போது துபையில் உள்ளார். அங்கு சில நாள்கள் கார் பயிற்சிக்குப் பின் படப்பிடிப்பில் இணைவார் எனத் தெரிகிறது. புதிய திரைப்படத்திற்காக 16 கிலோ உடல் எடையைக் குறைத்த சல்மான் கான்!Information has emerged regarding the shooting of the film Daredevil, starring actor Ajith Kumar.