தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

Wait 5 sec.

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் கூறிய தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 8 மீனவர்கள் தனித்தனியே இரண்டு படகுகளில் புதன்கிழமை மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.இவர்கள் 8 பேரும் கச்சத்தீவு அருகே பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக வியாழக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களது விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கைதான மீனவர்கள் 8 பேரையும் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவது தமிழக மீனவர்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்குமாறு அவர்களின் குடும்பத்தினரும் மீனவ அமைப்புகளும் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.Regarding the arrest of eight Tamil Nadu fishermen by the Sri Lankan Navy while they were fishing near Katchatheevu...ரூ.200 கோடியில்நதி இணைப்புத் திட்டங்கள்