தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026 செய்திகள் - நேரலை

Wait 5 sec.

பயிர்க்கடன் 100% தள்ளுபடி செய்யப்படுமா? விவசாயிகளுக்கான பயிர்க்கடன் முதலில் ரூ. 50,000 வரையிலும், அதனைத்தொடர்ந்து ரூ. 75,000 வரையிலும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டது. பயிர்க்கடன் 100% தள்ளுபடி செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.வேளாண் துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கீடு!தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்று முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஆக. 5) தொடங்கியது. முதல் நாளில் 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். தமிழ்நாடு பொது பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கப்பட்டது.தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று காலைதாக்கல்தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று (ஆக. 6) காலை தாக்கல் செய்யப்படவுள்ளது. தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் ஆர். வினோத் தாக்கல் செய்யவுள்ளார்.