துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 19-ஆவது ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி 2-0 கோல் கணக்கில் நெரோகா எஃப்சி அணியை புதன்கிழமை வென்றது.குரூப் ‘டி’-யில் இருக்கும் இவ்விரு அணிகளுக்குமே இது 2-ஆவது ஆட்டமாக அமைய, இந்திய கடற்படை அணி முதல் வெற்றியையும், நெரோகா அணி முதல் தோல்வியையும் பதிவு செய்தன. இரு அணிகளும் முறையே 2 மற்றும் 4-ஆம் இடங்களில் உள்ளன.இந்த ஆட்டத்தில் இந்திய கடற்படை அணிக்காக ரோஷன் பன்னா 23-ஆவது நிமிஷத்திலும், முகமது இனாயத் 65-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தனா்.இதனிடையே, 20-ஆவது ஆட்டத்தில் இந்திய ராணுவ அணி 4-0 கோல் கணக்கில் எஃப்சி பனாரஸ் அணியை வீழ்த்தியது. அந்த அணிக்காக சமீா் முா்மு (12’), சாய்கோம் போரிஷ் சிங் (23’), சுபம் ராணா (35’), கிறிஸ்டோபா் காமெய் (45+2’) கோல் அடித்தனா்.குரூப் ‘பி’-யில் ராணுவ அணி 2 ஆட்டங்களில் 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்க, பனாரஸ் அணி 3 ஆட்டங்களில் 3-ஆவது தோல்வியுடன் கடைசியாக 4-ஆவது இடத்தில் உள்ளது.