கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையின் உபரி நீர்வரத்து காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 நாள்களில் 2.52 அடி உயர்ந்துள்ளது.கேரளம் மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணை நிரம்பி உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி கடந்த 5 நாள்களாக உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக மேட்டூர் அணைக்கு செவ்வாய்க்கிழமை முதல் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 19,119 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் செவ்வாய்க்கிழமை காலை 73.02 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 75.64 அடியாக உயர்ந்துள்ளது.கடந்த 2 நாள்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 2.52 அடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது அணையின் நீர் இருப்பு 31.74 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.Regarding the rise in the Mettur Dam's water level by 2.52 feet over two days...தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!