தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) நடப்பு சீசனில் நெல்லை ராயல் கிங்ஸ் 50 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. நடப்பு சீசனின் மூன்றாவது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 204/6 ரன்கள் குவித்தது.இதில் அதிகபட்சமாக அதீஷ் 41, ரித்திக் ஈஸ்வரன் 36, சோனி யாதவ் 35 ரன்கள் குவித்தார்கள். அபிஷேக், சிலம்பரசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அடுத்து பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 17.2 ஓவர்களில் 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக அஸ்வந்த் வால்தப்பா 31, தினேஷ் ராஜ் 29, ஜெகதீசன் 27 ரன்கள் குவித்தார்கள். நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் சார்பாக என்எஸ் ஹரிஷ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ரோஹித், ராக்கி, சோனு தலா 2 விக்கெட்டுகளும் எடுத்து வெற்றிக்கு உதவினார்கள்.நடப்பு சீசனில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. Tamil Nadu Premier League Nellai Royal Kings won by 50 runs