முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசில் நேற்று (ஆக. 5) நிதியமைச்சர் மரிய வில்சன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் இன்று (ஆக. 6) முதல்முறையாக தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அவர் பேசுகையில், "ஜூன் 12 அன்று மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையிலும் விவசாயிகளின் நலனை அக்கறை கொண்டுள்ளது நம் அரசு. டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு ரூ. 134.84 கோடி குறுவை தொகுப்பு திட்டம் வழங்கினார். 8.26 ஏக்கர் பரப்பரளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை நிலங்கள் 100% பயிர்க் காப்பீடு கொண்டு வரப்படும். ஒரு கோடி விவசாயிகளுக்கு ரூ. 4 கோடி மதிப்பீட்டில் மண்வள அட்டைகள் வழங்கப்படும். மண்வளத்தைப் பாதுகாக்க லட்சம் ஏக்கருக்கு பசுந்தாள் உரம் வழங்கப்படும். விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்புகளுக்கு பயிர்க்காப்பீடு மற்றும் நிவாரணம் வழங்கப்படும்" என்றார். TN Agriculture budget 2026: minister vinoth speaks about mettur dam openவேளாண் பட்ஜெட் 2026: கருப்புச் சட்டை அணிந்து வந்த திமுக எம்.எல்.ஏ.க்கள்!