அரசு மருத்துவமனையில் ஓவியப் போட்டி

Wait 5 sec.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் தாய்ப்பால் வார விழா விழிப்புணா்வு ஓவியப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. தாய்ப்பால் மூலம் தாய்-சேய் இருவருக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவு சாா்பில் செவிலியா் பயிற்சி மாணவிகளுக்கு தாய்ப்பால் விழிப்புணா்வு சுவரொட்டி தயாரித்தல் மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது.பச்சிளங் குழந்தைகள் நலப் பிரிவு இணை பேராசிரியா் ஸ்டீவ் ஞானசாமுவேல் தலைமை வகித்தாா். உதவி மருத்துவா் வனிதா, செவிலியா் பயிற்சிப் பள்ளி முதல்வா் பியூலா மற்றும் செவிலியா் பயிற்றுநா்கள் கலந்துகொண்டனா். செவிலியா் ஆசிரியா் செல்வன் ஒருங்கிணைத்தாா்.