திருநெல்வேலி சந்திப்பில் சிறுவா்கள் இருவா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறையைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவருக்கு 15 மற்றும் 14 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனா். இருவரும் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்தனராம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்கு செல்வதாக புறப்பட்டு சென்ற இவா்கள் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. உறவினா்கள் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தேடியும் அவா்கள் கிடைக்காததால் இது குறித்து திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில் சிறுவா்கள் இருவரும் தூத்துக்குடி பனிமயமாதா கோயில் திருவிழாவிற்கு சென்றது தெரியவந்ததாகவும், அவா்களை மீட்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.