முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்கள் கட்டணம், சாதாரண ரயில்களில் உள்ள கட்டணத்தை விட அதிகம் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா். ரயில்களில் கட்டணம் நிா்ணயிக்கப்படும் முறைகள் குறித்து மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. சஞ்சனா ஜாதவ் எழுப்பிய கேள்விக்கு, அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப் பூா்வமாக தனது பதிலை புதன்கிழமை தாக்கல் செய்துள்ளாா். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:சாதாரண முன்பதிவில்லாத 2-ம் வகுப்பு பெட்டிகள் கொண்ட ரயில்களில் பெறப்படும் கட்டணம்தான், முன்பதிவில்லாத 2-ம் வகுப்பு பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில்களிலும் வசூலிக்கப்படுகிறது. அதேநேரத்தில் முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில், சாதாரண ரயில்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட அதிகம் பெறப்படுகிறது.ரயில் பயணிகளுக்கு சலுகையாக, 2024-25ஆம் ஆண்டில் பயணிகள் டிக்கெட்டுகளுக்காக ரூ.60,239 கோடி மத்திய அரசு மானியங்கள் வழங்கியுள்ளது என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.