லீக்ஸ் கோப்பை குரூப் சுற்று ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸி (39 வயது) 2 கோல்கள், 1 அசிஸ்ட் செய்து ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தியுள்ளார். கால்பந்து உலகக் கோப்பைக்குப் பிறகு, மீண்டும் அமெரிக்காவுக்கு வந்திருக்கும் லியோனல் மெஸ்ஸி தனது இரண்டாவது போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார். லீக்ஸ் கோப்பை குரூப் சுற்று ஆட்டத்தில் இன்டர் மியாமி - சான் லூயிஸ் அணியும் இன்று அதிகாலை மோதின. இந்தப் போட்டியில் இன்டர் மியாமி 4-2 என வென்றது. இதில் லியோனல் மெஸ்ஸி 11, 44ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார். முதல் பாதியின் ஸ்டாப்பேஜ் நேரத்தில் 45+7ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி ஒரு அசிஸ்ட் செய்தும் அசத்தினார். இந்தச் சிறப்பான செயல்பாடுகளுக்காக மெஸ்ஸிக்கு ஆட்ட நாயகன் விருது தரப்பட்டது. உலகக் கோப்பையிலும் அதிகமுறை ஆட்ட நாயகன் விருது வென்ற மெஸ்ஸி, மீண்டும் தனது ஆதிக்கத்தை நிறுவி வருகிறார். மொத்தமாக இதுவரை மெஸ்ஸி 921 கோல்கள், 419 அசிஸ்ட்டுகளை செய்துள்ளார். இந்தப் போட்டியில், மின்னல் காரணமாக இரண்டாம் பாதியில் ஆட்டம் 30 நிமிஷம் ஒத்திவைக்கப்பட்டது. 12 லீக்ஸ் கோப்பை போட்டிகளில் 14 கோல்கள் அடித்து, அதன் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனை படைத்துள்ளார். முன்னதாக, லாஸ் ஏஞ்சலீஸ் அணியின் டெனிஸ் போகுவானா 13 கோல்களுடன் முதலிடத்தில் இருந்தார். தற்போது, இந்த சாதனையும் மெஸ்ஸியினால் முறியடிக்கப்பட்டுள்ளது. லீக்ஸ் கோப்பையின் கடந்த சீசனில் இன்டர் மியாமி அணி இறுதிப் போட்டியில் 0-3 என தோல்வியுற்றது. அதில் லூயிஸ் சௌரஸ் ஒருவரை கடித்ததால் அவர் ஆறு போட்டிகளில் விளையாடமாட்டார் என தடை விதிக்கப்பட்டது. அதனால், இந்தாண்டு அவர் லீக்ஸ் கோப்பையில் பங்கேற்கமாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. A little finishing, a little creation, a whole lotta Messi Lionel Messi is your MOTM presented by GEICO pic.twitter.com/W5sGeyrx86— Leagues Cup (@LeaguesCup) August 6, 2026மாட்ரிட் காட்டுத் தீ: நிவாரண நிதியாக ரூ. 90 லட்சம் வழங்கிய மெஸ்ஸி!Lionel Messi scores his first 2 goals since the World Cup as Inter Miami beats San Luis 4-2