சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக வியாழக்கிழமை காலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,160 உயர்ந்துள்ளது.சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்திருக்கும் நிலையில், தங்கத்தின் விலை கடும் ஏற்றத்தை கண்டுள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ. 50 குறைந்து ரூ. 13,200-க்கும், சவரனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,05,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.தொடர்ந்து நேற்று ஒரே நாளில் காலை, மாலை என இரண்டு முறை அதிரடியாக தங்கத்தின் விலை உயர்ந்தது. சென்னையில் நேற்று ஒரு சவரனுக்கு ரூ. 2,240 உயர்ந்து ரூ. 1,07,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலையும் அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 1,10,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ. 270 உயர்ந்து, ரூ. 13,750-க்கு விற்பனையாகிறது.இதேபோல், வெள்ளியின் விலையும் வியாழக்கிழமை காலை அதிரடியாக கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 250-க்கும், ஒரு சவரன் ரூ. 2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.Gold price surges by Rs. 2,160! Today's rates! (Aug. 6)‘கோட் சூட் அணிந்த விவசாயி’... விஜய்யை புகழ்ந்த அமைச்சர் பேச்சுக்கு திமுகவினர் எதிர்ப்பு!