கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!

Wait 5 sec.

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜார்க்கண்ட் சட்டப்பேரவையை நோக்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி பேரணி செல்லத் திட்டமிட்டுள்ளதாக அம்மாநில மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது.ஜார்க்கண்ட் அரசுப் பணித் தேர்வாணையம் மற்றும் பிற பணி நியமனத்திற்கு நடத்தப்பட்ட தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டி நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த ஜூலை 25 முதல் ராஞ்சியி ஜெய்பால் சிங் முண்டா அரங்கத்தில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.14-வது ஜார்க்கண்ட் பிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஆட்சேர்ப்புத் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து சிபிஐ அல்லது மாநிலத்திற்கு வெளியேயுள்ள ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவைக் கொண்டு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்த போராட்டம் 13 வது நாளை எட்டியுள்ள நிலையில், போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இரண்டு மாணவிகள் உட்பட ஐந்து மாணவர்கள் கடந்த செவ்வாய்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த சில நாள்களாக நகரில் பெய்துவரும் கனமழையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மாணவர்களுகள் மன உறுதியுடன் போராடி வருகின்றனர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் கலந்தாலேசிக்கவும், உறுதியான தீர்வுகளை பரிந்துரைக்கவும் அமைச்சர்கள் குழுவை முதல்வர் ஹேமந்த் சோரன் அமைத்துள்ளார்.இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் அமைப்பின் தலைவர் ராதே குமார் கூறியதாவது:அரசு அதிகாரிகள் சமீபத்தில் எங்களைச் சந்தித்துப் பேசினார்கள். நாங்கள் அவர்களிடம் எங்கள் கோரிக்கைகளை முன்வைத்தோம். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், திட்டமிட்டபடி வரும் 10-ம் தேதி சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம்” எனக் குறிப்பிட்டார். உண்ணாவிரதத்தை முடிக்க... ராகுல் காந்தி மூலம் மனைவி மேற்கொண்ட முயற்சி தோல்வி: சோனம் வாங்சுக்Rally on August 10 if demands are not met! Jharkhand student protest intensifies!