கர்நாடகத்தில், கைப்பந்து விளையாட்டின்போது மயங்கி விழுந்த 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தக்ஷின கன்னடா மாவட்டத்தில் உள்ள சுரிஞ்சா பகுதியைச் சேர்ந்தவர் லிகித் அமின் (வயது 15). இவர் கோட்டே பொல்லாரு பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், லிகித் அமின் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் இணைந்து சுரிஞ்சா பகுதியில் உள்ள மைதானத்தில் கடந்த புதன்கிழமை (ஆக. 5) மாலை கைப்பந்து விளையாடியுள்ளனர். அப்போது, திடீரென லிகித் அமின் மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, லிகித் அமினை அங்கிருந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும், லிகித் அமின் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், லிகித் அமின் ஓடி விளையாடுவதும், திடீரென அவர் மயங்கி விழுவதும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளன. ஆனால், லிகித் அமினின் உயிரிழப்புக்கான முழுமையான காரணம் உடற்கூராய்வுச் சோதனைக்குப் பின்னரே தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விளையாட்டின்போது 10 ஆம் வகுப்பு சிறுவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!A 10th-grade student in Karnataka has died after collapsing while playing volleyball.