வேளாண் பட்ஜெட் 2026: சென்னை, கோவை, திருச்சியில் தளிர்க்கீரைகள் திட்டம்!

Wait 5 sec.

மக்களிடையே தளிர்க்கீரைகள் வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி போன்ற முக்கிய நகர்ப்புரப் பகுதிகளில் 20,000 தளிர்க்கீரை தொகுப்புகள் விநியோகம் செய்யப்படும் என்று பேரவையில் அமைச்சர் வினோத் தெரிவித்தார். 2026 -27 ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். "ப்ரோக்கோலி, முட்டைக்கோசு, முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, கொண்டைக்கடலை, ஆளிவிதைகள், வெங்காயம், பச்சைப்பயறு, கொள்ளு, எள். கோதுமை. கீரை வகைகள் ஆகியவற்றின், 7 முதல் 21 நாட்கள் வயதுடைய இளம் நாற்றுக்கள், தளிர்க்கீரைகள் (Microgreens) என்றழைக்கப்படுகின்றன. இந்த தளிர்க்கீரைகளில் முதிர்ந்த செடியினைவிட 40 மடங்கு வரை அதிக ஊட்டச்சத்துகள் உள்ளதாக அறியப்படுகிறது.எனவே புதிய முயற்சியாக, பொதுமக்களிடையே தளிர்க்கீரைகள் வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில், விதைகள், விதை வளர்ப்புத் தட்டுகள், தென்னைநார்க் கட்டிகள், நீர்த்தெளிப்புக் கருவி, வழிமுறைக் கையேடு ஆகியவற்றை உள்ளடக்கிய 20,000 தளிர்க்கீரை தொகுப்புகள் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி போன்ற முக்கிய நகர்ப்புரப் பகுதிகளில் விநியோகம் செய்யப்படும். இதற்கென, 2026-27ஆம் ஆண்டில், 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்றார். TN Agriculture budget 2026: microgreens scheme for cities in tamilnaduஎல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைஜூன் 12 அன்று மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையிலும்...! அமைச்சர் வினோத்