நடிகை ப்ரீத்தி அஸ்ரானி தன் நடிப்பு குறித்து பேசியுள்ளார். தமிழில் அயோத்தி திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ப்ரீத்தி அஸ்ரானி, தொடர்ந்து கிஸ், 29 ஆகிய திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். நல்ல நடிப்புத் திறன் கொண்ட நடிகை என்பதால் கதையம்சமுள்ள கதாபாத்திரங்களையும் ப்ரீத்தி தேர்வு செய்கிறார். தற்போது, நடிகர் எஸ்ஜே சூர்யாவின் கில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகை ப்ரீத்தி அஸ்ரானி, ”சினிமாவில் நாயகியாக வேண்டும் என்பது என் கனவு. ஆரம்பத்திலேயே நல்ல கதாபாத்திரங்கள் மற்றும் எப்படிப்பட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்கிற தெளிவு இருந்தது. நான் திரைப்படங்களின் எண்ணிக்கையைப் பெரிதாக நினைப்பதில்லை. நினைவில் இருக்கிற மாதிரி நல்ல கதாபாத்திரங்களுக்கே ஆசைப்படுகிறேன்.நடிகர் எஸ்ஜே சூர்யாவின் கில்லர் திரைப்படமும் அப்படியான ஒரு களம்தான். கில்லர் ஒரு புதிய முயற்சி; நடிப்பத் திறனைத் தாண்டி ஆக்ஷனும் செய்ய வேண்டும் என்பதால் ஆடிஷனில் கலந்துகொண்ட பின்பே தேர்வானேன். இதுவரை நான் நடித்த திரைப்படங்களிலிருந்து கில்லரில் வித்தியாசமான ப்ரீத்தியைப் பார்க்கலாம்” எனத் தெரிவித்துள்ளார். ஒழுக்கம் விழுப்பம்... சாக்ஷி அகர்வாலை விமர்சிக்கும் ரசிகர்கள்! Actress Preethi Asrani has spoken about her acting.