நெல்சன், ரஞ்சித், மிஷ்கின்..! தமிழ் இயக்குநர்களுக்கு மட்டும் டிசி சிறப்புக் காட்சி!

Wait 5 sec.

தமிழ்த் திரைப்பட இயக்குநர்களுக்கு மட்டும் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் டிசி திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டுள்ளது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் படம் “டிசி”. இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்கள் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிவிப்பு வெளியான நாள் முதல் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. டிசி படம் நாளை (ஆக. 7) திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழ்த் திரையுலகின் இயக்குநர்களுக்கு மட்டும் இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டுள்ளதாக, படக்குழு இன்று அறிவித்துள்ளது. இந்தச் சிறப்புக் காட்சியில், தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான நெல்சன், கே.எஸ். ரவிக்குமார், சுந்தர் சி, பா. ரஞ்சித், ஹெச். வினோத், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி, பார்த்திபன், ஆதிக் ரவிச்சந்திரன், ராஜ்குமார் பெரியசாமி, மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சேரன், ஆர்.ஜே. பாலாஜி, ஆர்.கே. செல்வமணி, சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். View this post on Instagram இதயம் முரளி! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (ஆக. 7 - 13)A special screening of the DC film marking Lokesh Kanagaraj's debut as a lead actor has been held exclusively for Tamil film directors.