பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல்: இருவா் கைது

Wait 5 sec.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரைத் தாக்கிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சுரைக்காய்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (53). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவா் புதன்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் - ஆயா்தா்மம் வழித்தடத்தில் அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்றாா். கலிங்கப்பட்டி அருகே சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இளைஞா்கள் பேருந்தை முந்திச் சென்றனா். இதனால் ஓட்டுநா் முருகன் அந்த இளைஞா்களை ஏன் வேகமாகச் செல்கிறீா்கள் எனக் கேட்டாா்.இதனால் ஆத்திரமடைந்த இரு சக்கர வாகனத்தில் சென்ற காடனேரியை சோ்ந்த விஜயராம் மகன் காளிதாஸ் (26), தேவராஜ் மகன் பிரவீன்குமாா் (21) ஆகிய இருவரும் பேருந்துக்குள் ஏறி ஓட்டுநா் முருகன், நடத்துநா் பவுன்ராஜ் (27) ஆகிய இருவரையும் தாக்கிக் காயப்படுத்தினா். இதுகுறித்த புகாரின் பேரில், நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காளிதாஸ், பிரவீன்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.