புதிய திரைப்படத்திற்காக 16 கிலோ உடல் எடையைக் குறைத்த சல்மான் கான்!

Wait 5 sec.

நடிகர் சல்மான் கான் தன் புதிய திரைப்படத்திற்காகக் கணிசமாக உடல் எடையைக் குறைத்துள்ளார். தில் ராஜூ தயாரிப்பில் நடிகர் சல்மான் கான் - வம்சி கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. இதில், நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் துவங்கியுள்ளது.சல்மான் கான் இறுதியாக நடித்த சிக்கந்தர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது. இதனால், இப்படம் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தில் 4 இசையமைப்பாளர்கள் பணியாற்ற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் 2027 ஈகைத் திருநாளுக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், இப்படத்திற்காக நடிகர் சல்மான் கான் 16 கிலோ உடல் எடையைக் குறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு உடல் மெலிந்த நிலையில் சல்மான் காணப்பட்டதால் அவரது ரசிகர்கள் வருத்தமடைந்தனர். தற்போது, அவரே அதற்கு விளக்கம் அளித்துள்ளார். நடிகர்கள் கவின், நயன்தாராவின் ஹாய் வெளியீட்டில் மாற்றம்? Actor Salman Khan has lost a significant amount of weight for his new movie.