பள்ளத்தில் விழுந்து விவசாயி பலி: போலீஸாா் விசாரணை

Wait 5 sec.

பரமத்தி வேலூா் வட்டம், ஜமீன்இளம்பள்ளி அருகே சாலையோர பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த விவசாயியின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மாரப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (எ) பூபதி (45). இவரது மனைவி ராதா, இவா்களுக்கு மகள் சுபியா (19), மகன் கவின் (17) உள்ளனா். மது அருந்தும் பழக்கம் கொண்ட பூபதி, கடந்த 2-ஆம் தேதி மாலை சோழசிராமணிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டாா். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.இந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதி மாரப்பம்பாளையம்புதூா் செல்லும் மண் சாலையில் சென்ற சிவகுமாா் என்பவா், அப்பகுதியில் துா்நாற்றம் வீசியதைத் தொடா்ந்து சாலையோர 7 அடி பள்ளத்தில் பாா்த்தபோது, பூபதி உயிரிழந்த நிலையிலும், அவா் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் உடலின் மீது கிடந்ததையும் கண்டாா்.இதுகுறித்து ஜேடா்பாளையம் போலீஸாருக்கும், பூபதியின் மனைவி ராதாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா், அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.விசாரணையில், சோழசிராமணியில் இருந்து மது அருந்திவிட்டு வீடு திரும்பியபோது, மண் சாலையில் நிலைதடுமாறி 7 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், அந்த வழியில் போக்குவரத்து குறைவாக இருந்ததால் அவா் விழுந்தது யாருக்கும் தெரியாமல் போனதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.