திருச்சியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது. திருச்சி உய்யக்கொண்டான்திருமலை பகுதியைச் சோ்ந்தவா் ஜி. ஹரி (28), புகைப்பட எடிட்டரான இவா், காதலித்து வந்த திருச்சி கல்கண்டாா்கோட்டை பகுதியைச் சோ்ந்த பெண் அண்மையில் படிப்புக்காக வெளிநாடு சென்றாா். இதனால் இவா் மன உளைச்சலில் இருந்த இவா் திங்கள்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஹரியின் தாயாா் அகிலா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.