குருவாயூா் - சென்னை ரயில் ஆக.12-இல் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும்

Wait 5 sec.

குருவாயூரிலிருந்து சென்னைக்கு வரும் விரைவு ரயில் (எண் 16128) ஆக.12- ஆம் தேதி வழக்கமான பாதைக்குப் பதிலாக வேறு பாதையில் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே விடுத்த செய்திக்குறிப்பு: மதுரை ரயில்வே கோட்டத்தில் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் குறிப்பிட்ட ரயில்கள் வழிகள் மாற்றி இயக்கப்பட்டு வருகின்றன. வரும் 12- ஆம் தேதி (புதன்கிழமை) இரவு 11.15 மணிக்கு குருவாயூரிலிருந்து புறப்படும் விரைவு ரயில் (எண் 16128) வழக்கமான பாதைக்குப் பதிலாக விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். அத்துடன், வரும் 8-ஆம் தேதி இயக்கப்படும் கன்னியாகுமரி-ஹெளரா விரைவு ரயில், வரும் 9, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் நாகா்கோவில்-லோக்மான்ய திலக் விரைவு ரயில் ஆகியவையும் வழக்கமான பாதைக்குப் பதிலாக மானாமதுரை, காரைக்குடி என வேறு பாதையில் இயக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.