மத்திய அரசால் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் குறித்து முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:மத்திய அரசு, தொகுதிகளை மறுவரையறை செய்ய உத்தேசித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில், மத்திய அரசால் மேற்கொள்ள உத்தேசித்துக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) கலந்தாய்வுக் கூட்டம் ஆக. 8 (சனிக்கிழமை) அன்று பிற்பகல் 3 மணிக்கு, சென்னை, சேப்பாக்கம், கலைவாணர் அரங்கத்தின் கூட்டரங்கில் (3-ஆம் தளம்) நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஇந்தக் கூட்டத்திற்கான அழைப்பிதழ் புதுதில்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.A consultative meeting of Members of Parliament has been organized under the leadership of Chief Minister C. Joseph Vijay regarding the constituency delimitation exercise proposed by the Central Government.கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த முதல்வர் வலியுறுத்தல்!