தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு நாளையொட்டி, மாநிலம் முழுவதும் திமுக சார்பில் அஞ்சலி கூட்டங்களும், அமைதிப் பேரணிகளும் நடைபெற்று வருகின்றது.இந்த நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.இதனைத் தொடர்ந்து, ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.இந்த பேரணியில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, துணைப் பொதுச் செயலர் கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு உள்ளிட்டோருடன் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.தொடர்ந்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.Karunanidhi's Death Anniversary! Silent Procession Led by M.K. Stalin!2024-25-இல் மாநிலக் கட்சிகள் பெற்ற நன்கொடை ரூ.1,050 கோடி: ரூ.365.78 கோடியுடன் திமுக முதலிடம்