மாணவர்கள் மீது தடியடி! அமித் ஷா பதிலளிக்க ஒத்திவைப்பு தீர்மானம்கோரி மாணிக்கம் தாகூர் நோட்டீஸ்

Wait 5 sec.

தில்லியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம்கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.தில்லியில் ஜூலை 20 ஆம் தேதியில் நீட் போராட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.மேலும், மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? என கேள்வியும் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரிய பதிலளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இந்த நிலையில், தில்லியில் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம்கோரி, மக்களவை பொதுச் செயலாளருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, தில்லியில் மாணவர்களின் போராட்டத்தில் நடந்த அரசியல் நடவடிக்கை தொடர்பான மற்றும் மிக அவசரமான முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தை விவாதிப்பதற்காக தீர்ப்பாணைகோரி மனுவைத் தாக்கல் செய்கிறேன்.மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறை நடவடிக்கைக்கு யார் அதிகாரம் அளித்தது? யாருடைய வழிகாட்டுதலின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது? அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக நியாயமற்ற வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது.இந்தச் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகள், பொதுமக்களிடையே பரவலான கவலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பேச்சு, கருத்துச் சுதந்திரம், அமைதிப் போராட்டம், சட்ட அமலாக்க அமைப்புகள் மீதான நம்பிக்கை முதலிய உத்தரவாதங்கள் தொடர்பான பிரச்னைகளை எழுப்புகின்றன. இந்தப் பிரச்னைகளை ஆராய்ந்து, அதற்கான அரசாங்கத்தை பொறுப்பேற்கச் செய்வது அவையின் கடமையாகும்.ஆகையால், இந்த விவகாரம் குறித்து உடனடி விவாதம் நடத்துவதற்காக, அவையின் வழக்கமான அலுவல்கள் ஒத்திவைக்கப்பட வேண்டும். மேலும், இந்த சம்பவம் மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒரு விரிவான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.2024-25-இல் மாநிலக் கட்சிகள் பெற்ற நன்கொடை ரூ.1,050 கோடி: ரூ.365.78 கோடியுடன் திமுக முதலிடம்Manickam Tagore MP gives Adjournment Motion Notice in Lok Sabha demanding a Statement by the Amit Shah on the Police Action During the Student Protest