சென்னையில் தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பங்குச் சந்தை ஆலோசகர் பி.ஆா். சுந்தரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.சென்னை பட்டினப்பாக்கம் டிஜிஎஸ் தினகரன் சாலையில் உள்ள ஓா் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபரும், பங்குச் சந்தை ஆலோசகருமான பி.ஆா். சுந்தா் மீது, தனியாா் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய 28 வயது பெண், சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்திருந்தாா்.அதில், பி.ஆா்.சுந்தா் அண்மையில் அவரது வீட்டுக்கு என்னை வரவழைத்து தகாத முறையில் நடந்துகொண்டாா். இந்த சம்பவத்தை அறிந்த மனைவி மங்கையா்க்கரசி, வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.புகாரின் அடிப்படையில் ஐஸ்ஹவுஸ் போலீஸாா், தொழிலதிபா் பி.ஆா். சுந்தா், மங்கையா்க்கரசி ஆகியோா் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.இந்த நிலையில், பெங்களூருவில் இருந்த பி.ஆா். சுந்தர் மற்றும் அவரது மனைவி மங்கையர்க்கரசியை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்த போலீஸார், நேற்றிரவு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பதியப்பட்ட வழக்கு என்றும், காவலில் வைக்கக்கூடாது என்றும் வாதங்களை முன்வைத்தார்.இதனைத் தொடர்ந்து, குற்றத்துக்கான ஆதாரம் இல்லாததால் இருவரையும் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி மறுத்துவிட்டார்.மேலும், பி.ஆா். சுந்தர் மற்றும் அவரது மனைவி மங்கையர்க்கரசிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து இருவரும் நேற்றிரவே வீடு திரும்பினர்.Sexual harassment case! Court refuses to imprison P.R. Sundar!பாலியல் தொல்லை வழக்கு: சென்னை தொழிலதிபா், மனைவியுடன் பெங்களூரில் கைது