தமிழ்நாடு முதல்வர் விஜய் அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவகாரத்து வழக்கு, செங்கப்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மீண்டும் வெள்ளிக்கிழமை(ஆக.7) விசாரணைக்கு வருகிறது. நடிகரும், தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவுக்கு கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஜோசன் சஞ்சய், திவ்யா சாஷா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில், விஜய்-சங்கீதா இடையே கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி கணவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்தும், நிரந்த ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசிப்பதற்கான உரிமையும் வேண்டும் என்று சங்கீதா அந்த மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு 2026 பிப்ரவரி 26 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு ஏப் 20 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அன்று விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களது வழக்குரைஞர்கள் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதையடுத்து இருவரையும் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணை மே 19 ஆம் தேதிக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஜூன் 15 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அன்று இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இருவரும் ஆஜராகாத நிலையில், இருவரும் பொதுவெளியில் பிரபலமானவர்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என இருதரப்பு வழக்குரைஞர்களும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து இந்த வழக்கு செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஜூன் 15 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது. சங்கீதா தரப்பு வழக்குரைஞரிடம் நீங்கள் ஏன் வக்காலத்து தாக்கல் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். பின்னர் வழக்கில் தொடர்புடைய விஜய்-சங்கீதா இருவரையும் சமரச மையத்துக்குதான் அனுப்ப வேண்டும் என்று வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.இந்த நிலையில், முதல்வர் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் வெள்ளிக்கிழமை(ஆக.7) விசாரணைக்கு வருகிறது. இருவரும் காணொளி காட்சி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது. காணொளி காட்சி வாயிலாக விளக்கம் அளிப்பதற்கான இணையதள முகவரி சமர்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Divorce case of Vijay and Sangeetha to be heard at Chengalpattu Court today: Will Vijay appear in person?தமிழக ’வெற்றி' பட்ஜெட்!