அமெரிக்கா தேர்தல் முடிவு எதிரொலி: தங்கம், வெள்ளி விலை2வது முறையாக உயர்வு!

Wait 5 sec.

அமெரிக்கா நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவு எதிரொலியாக, தங்கம், வெள்ளி விலை இன்று (நவ. 4) இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது.சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இந்த வாரம் தொடக்கம் முதலே சற்று அதிகரித்து விற்பனையாகி வருகிறது. இதனைத் தொடந்து, அமெரிக்கா நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவு எதிரொலியாக தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 4) காலை சவரனுக்கு ரூ. 200 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,02,600-க்கும் கிராமுக்கு ரூ. 25 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 12,825-க்கும் விற்பனையானது.இந்த நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி, தங்கம் விலை இரண்டாவது முறையாக சவரனுக்கு ரூ. 2,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,04,800-க்கும் கிராமுக்கு ரூ. 275 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 210-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2 .10 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.Following the results of the U.S. midterm congressional elections, the prices of gold and silver have risen for the second time today (Nov. 4).தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய நிலவரம்! (நவ. 4)