முரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!

Wait 5 sec.

முரசு புயல் கரை கடந்த நிலையில் 3 முக்கிய விரைவு ரயில்கள் புதன்கிழமை (நவ.4) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே விடுத்த செய்திக்குறிப்பு: ஆந்திரப் பகுதியில் முரசு புயல் செவ்வாய்க்கிழமை கரை கடந்த நிலையில், சூழலைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதன்படி செகந்திரா பாத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (நவ.3) பிற்பகல் 12.25 மணிக்குப் புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில் (எண் 20629) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.பித்ரகுண்டாவிலிருந்து புதன்கிழமை (நவ.4) அதிகாலை 4.25 மணிக்குப் புறப்பட்டு சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு வரவேண்டிய விரைவு ரயில் (எண் 17237), சென்னை சென்ட்ரலில் இருந்து புதன்கிழமை (நவ.4) அதிகாலை 4.25 மணிக்குப் புறப்பட்டு பித்ரகுண்டா நிலையம் செல்லவிருந்த விரைவு ரயில் (எண் 17238) ஆகியவையும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.