ஈரானுக்கு உதவியதாக இந்திய, துருக்கி நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

Wait 5 sec.

ஈரானுக்கு உதவியதாக இந்தியா மற்றும் துருக்கி நாடுகளின் சில நிறுவனங்கள், தனிநபர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது.ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ல் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தியது.மேலும், ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கும் மற்றும் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அரசு எச்சரித்தது.இதனிடையே, அமெரிக்காவில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்தது. ஈரான் போர் மற்றும் பண வீக்கம் உள்ளிட்ட காரணங்களாலேயே குடியரசுக் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், குடியரசுக் கட்சியின் தோல்விக்கு ஈரான் போர்தான் காரணம் என டிரம்ப்பும் ஒப்புக்கொண்டார்.இந்த நிலையில், ஈரானின் ரகசிய எண்ணெய் வர்த்தகத்துக்கு உதவி செய்ததாக ஓசனிக் டெக்னாலஜிஸ், ஆர்யவர்த் ஷிப் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட இந்தியாவின் 9 நிறுவனங்கள் மீதும் துருக்கி நாட்டின் சில நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.ஈரான் போா் தாக்கம்: டிரம்ப் ஒப்புதல் The US imposes new sanctions on companies and individuals in India and Turkey over ties to Iran and shipments of Iranian oil