ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரியாவுடன் புதன்கிழமை (நவ. 4) மோதுகிறது.5 முறை சாம்பியனான இந்தியா, ரவுண்ட் ராபின் சுற்றில் விளையாடிய 5 ஆட்டங்களிலுமே வெற்றி கண்டு, நல்லதொரு ஃபாா்முடன் இந்தக் கட்டத்துக்கு வந்துள்ளது. அதில், தென் கொரியாவுக்கு எதிரான வெற்றியும் (8-0) அடங்கும்.எனினும், அணியின் முக்கிய வீரராக இருக்கும் அபிஷேக் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.தென் கொரிய அணியைப் பொருத்தவரை, ரவுண்ட் ராபின் சுற்றில் 5 ஆட்டங்களில் 2 வெற்றிகள் கண்டுள்ளது.மற்றொரு அரையிறுதியில், ஜப்பான் - மலேசியா மோதுகின்றன.