தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் நாளை முதல் 4 நாள்களுக்கு விடுமுறை அளித்து சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.தீபாவளி பண்டிகை வருகின்ற நவ. 8, ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், நாளை (நவ. 6) முதலே நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:“தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்கள் மற்றும் புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு வெள்ளிக்கிழமை (நவ. 6) விடுமுறை அறிவிக்கப்படுகிறது.இதனை ஈடுசெய்யும் வகையில் நவ. 28, சனிக்கிழமை அன்று கட்டாய வேலை நாளாக அறிவிக்கப்படுகின்றது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள நீதிமன்றங்கள் தீபாவளி விடுமுறைக்கு பிறகு மீண்டும் நவ. 10 ஆம் தேதி திறக்கப்படவுள்ளன.தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு சனிக்கிழமை (நவ. 7) முதல் திங்கள்கிழமை (நவ.9) வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. Diwali - A 4-day holiday for courts in Tamil Nadu, starting tomorrow!கவின் ஆணவ கொலை வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!