தில்லியில் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது! 2 பேர் பலி!

Wait 5 sec.

தில்லியின் சாந்தினி சௌக் பகுதியில் கட்டுமானத்தில் இருந்த மூன்று அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகத் தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. சாவ்ரி பஜார் மெட்ரோ நிலையத்திற்கு அருகே கட்டுமானத்தில் இருந்த மூன்று அடுக்குமாடி கட்டடம் இன்று காலை 9.00 மணியளவில் இடிந்து விழுந்ததாகவும், சிலர் உள்ளே சிக்கியிருப்பதாகவும் காவல் துறைக்கு தகவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. மேலும், உதவி கோட்ட அதிகாரி ராஜேஷ் சுக்லா, நிலைய அதிகாரி பூபேந்தர் சர்மா, டி.கே. ராய் ஆகியோர் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். இந்த கட்டட விபத்தில் இதுவரை இருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும், சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சௌரப் பரத்வாஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தில்லி மாநகராட்சி நிர்வாகத்தைக் கடுமையாகச் சாடினார். கட்டடங்களின் பாதுகாப்பு தணிக்கை குறித்தும், தில்லியில் உள்ள மாநகராட்சி மற்றும் பிற அரசுத் துறைகளின் செயல்பாடுகளில் நிலவும் ஊழல் குறித்தும் அவர் கேள்விகளை எழுப்பினார். ரேகா குப்தாவின் அரசும், மாநகராட்சியும் தில்லியில் உள்ள அனைத்துக் கட்டடங்களிலும் பலமுறை பாதுகாப்புத் தணிக்கைகளை நடத்தியும், கட்டடங்கள் தொடர்ந்து இடிந்து விழுகின்றன. ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், தொடர்புடைய பல்வேறு துறைகள் ஊழல் செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். அத்துடன், லஞ்சம் கொடுக்க மறுப்பவர்களுக்கு மாநகராட்சி சீல் வைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.