தஞ்சையில் விஷ வண்டுகள் கடித்ததில் மாணவிகள் உள்பட 15 பேர் மருத்துவமனையில் அனுமதி!

Wait 5 sec.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே விஷ வண்டுகள் கடித்ததில் 13 மாணவிகளுக்கும், இரண்டு பெரியவர்களுக்கும் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோயில் மெயின் ரோட்டில் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த நிலையில் பள்ளி அருகில் இருந்த மரத்திலிருந்து விஷ வண்டுகள் திடீரென பறந்து வந்து மாணவிகள் மற்றும் அந்த பகுதியில் நடந்து சென்றவர்களை கொட்டியது. விஷ வண்டுகள் கொட்டியதில் 13 மாணவிகளுக்கும் இரண்டு பெரியவர்களுக்கும் மயக்கம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து 15 நபர்களும் நாச்சியார்கோவில் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.தில்லியில் 9 வயது மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்து பலி!