சாம்பியன்ஸ் லீக் அறிமுக சீசனில் கோமோ கால்பந்து அணி சிறப்பாக விளையாடி வட்ருகிறது. அதிலும் அந்த அணியின் வீரர் நிகோ பாஸ் கோல் பங்களிப்பில் முதலிடம் பிடித்துள்ளார். ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் மிகப்பெரிய கால்பந்துத் தொடரான சாம்பியன்ஸ் லீக்கில், இத்தாலி நாட்டைச் சேர்ந்த கோமோ அணி இந்த சீசனில்தான் முதல்முறையாக பங்கேற்றுள்ளது.இன்றைய போட்டியில் கோமோ அணி 9-1 என்ற கோல் கணக்கில் லென்ஸ் அணியை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்தப் போட்டியில் நிகோ பாஸ் 2 அசிஸ்ட், ஒரு கோல் அடித்து அசத்தினார். இதுவரை நான்கு சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்ஜென்டீன தேசிய அணியைச் சேர்ந்த நிகோ பாஸ் 3 கோல்கள், 5 அசிஸ்டுகளை செய்துள்ளார். மொத்தமாக 8 கோல் பங்களிப்பில் ஈடுபட்டுள்ளார். சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் அதிக கோல் பங்களிப்பு செய்தவர்கள் பட்டியலில் நிகோ பாஸ் முதலிடம் வகிக்கிறார். மேலும் அதிக அசிஸ்ட்டுகள் (5) செய்தவர்களிலும் நிகோ பாஸ் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நான்கு சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாடியுள்ள கோமோ அணி 3 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. முதல் சீசனிலேயே இவ்வளவு அற்புதமாக விளையாடுமென யாரும் நினைக்கவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பிஎஸ்ஜி, ரியல் மாட்ரிட், ஆர்செனல் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன.In their first Champions League campaign Como are doing something very special #UCL pic.twitter.com/qYnvY6F6Xg— UEFA Champions League (@ChampionsLeague) November 4, 2026பின்வாங்குவதோ தயங்குவதோ கிடையாது..! சாதனை படைத்த மாயாவின் பேட்டி! Champions League: Como impresses on debut; Nico Paz takes the top spot!