யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

Wait 5 sec.

யுபிஎஸ்சி முதன்மைத் தோ்வு 2026-க்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) வியாழக்கிழமை வெளியிட்டது.ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கு ஆண்டுதோறும் தோ்வுகள் 3 கட்டங்களாக (முதல்நிலை, முதன்மை, ஆளுமை) நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்தாண்டுக்கான (2026) முதன்மைத் தேர்வு முடிவுகள் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 1,016 காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஆக.21 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற்ற குடிமைப் பணிகள் முதன்மைத் தோ்வில் 2,526 பேர் தோ்ச்சி பெற்று, அடுத்தகட்டமாக ஆளுமைத் தோ்வுக்கு தகுதிபெற்றுள்ளனா்.”முதன்மைத் தேர்வில் வெற்றிபெற்று ஆளுமைத் தோ்வுக்கு தகுதிபெற்ற தோ்வா்கள் நவ.11 முதல் நவ.25 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் தேர்வாணையம் கோரிய சான்றிதழ்கள், ஆவணங்கள் மற்றும் பிற தகவல்களை யுபிஎஸ்சி வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆளுமைத் தோ்வு நடைபெறும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்” என யுபிஎஸ்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.The results for the UPSC Main Examination 2026 have been released today.