ஆயுள் முழுக்க அடையாளத்தை நிரூபிக்க மக்கள் அலைய வேண்டுமா? பிரதமருக்கு சிபிஎம் கேள்வி!

Wait 5 sec.

ஆயுள் முழுக்க அடையாளத்தை நிரூபிக்கவே மக்கள் அலைய வேண்டுமா? என பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு, ஆதார் அட்டைக்குப் பதிலாக வாக்காளர் அடையாள அட்டைப் பெற்றிருப்பதைக் கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலினை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கெனவே, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) மூலம் நாட்டில் சுமார் 13 கோடி பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் அரசின் நலத்திட்டங்களைப் பெற முடியாது என்பது ஏழைகள் மீதான பாஜக அரசின் மற்றொரு கொடூரமான தாக்குதல் எனக் கூறி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் பதிவிட்டுள்ளார்.இதுபற்றி, இன்று (நவ. 4) அவர் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னொரு காலத்தில் அனைத்திற்கும் ரேஷன் அட்டையே அடிப்படை என்றார்கள். பிறகு அனைத்திற்கும் ஆதாரம் "ஆதார்" என்றார்கள். இப்போது, வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால் அரசிடம் இருந்து எந்த உதவிகளையும் பெற முடியாது என்கிறார்கள். அரசிடம் இருந்து உதவிகளை எதிர்பார்த்து இருப்பவர்கள் ஏழைகளே! எனவே, இது ஏழைகள் மீதான பாஜக அரசின் மற்றொரு கொடூரமான தாக்குதல். முதலாளிகளிடம் முகவரி கூட கேட்காத ஆட்சியாளர்கள் ஏழைகளை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, இப்போது வாக்காளர் அடையாள அட்டை கேட்கிறார்கள். ஆயுள் முழுக்க அடையாளத்தை நிரூபிக்கவே மக்கள் அலைய வேண்டுமா மோடி அவர்களே?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்CPIM has posed a question to PM Modi: must people spend their entire lives running around just to prove their identity?