தேர்தல் தோல்விக்கு ஈரான் போர்தான் காரணம்! - அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் பதிவு!

Wait 5 sec.

அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி கடும் தோல்வியடைந்ததற்கு ஈரான் மீதான போர்தான் காரணம் என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் 435 பிரதிநிதிகள் அவை இடங்களுக்கும், 35 செனட் அவை இடங்களுக்கும், பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்கள், உள்ளாட்சிப் பதவிகளுக்குமான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி, கடந்த நவ. 3 ஆம் தேதி மாலை நடைபெற்றது.இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (நவ. 4) காலை முதல் எண்ணப்பட்டு வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது. மேலும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையாக இடங்களை ஜனநாயகக் கட்சி வென்றுள்ள நிலையில், குடியரசுக் கட்சியின் தோல்விக்கு ஈரான் மீதான போர்தான் காரணம் என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளது கவனம் பெற்றுள்ளது. இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “கருத்துக் கணிப்பாளர் ஒருவர் பொது வாக்கெடுப்பில் நாம் 13 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்றுவிடுவோம் என்று என்னிடம் கூறினார். இதைக் கேட்டு நானே அதிர்ச்சியடைந்தேன். அவருடைய கருத்துக் கணிப்பில், 2024 தேர்தலில் டிரம்ப்புக்கு வாக்களித்த பலர் இப்போது கோவமாக இருப்பதையும், ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதையும் அவர் கண்டறிந்தார். நம்மைக் கைவிட்ட அந்த வாக்காளர்களிடம் எத்தகைய நடவடிக்கை, அவர்களை மீண்டும் குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்கவைக்கும் எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள் பெரும்பாலும் இவற்றையே பதிலாகக் கூறினர். 1. போரை முடிவுக்குக் கொண்டு வருவது. 2. விலைவாசி உயர்வு/ பணவீக்கத்தில் கவனம் செலுத்துவது.3. அமெரிக்காவுக்கு முன்னுரிமை. 4. இஸ்ரேல் உடனான நமது உறவை மாற்றுவது. நாம் தோல்வி அடைந்ததற்குக் காரணம் அந்தப் போர்தான் (ஈரான் மீதான போர்). நேற்று இரவு அதிபரே (டிரம்ப்) இதை என்னிடம் கூறினார்” எனத் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் முதல் முஸ்லிம் செனட்டர் அப்துல்! இவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு?US Vice President J.D. Vance has stated that the war with Iran is the reason for the Republican Party's heavy defeat in the US midterm elections.