அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!

Wait 5 sec.

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.அமெரிக்க நாடாளுமன்றம் செனட் சபை (மேலவை), பிரதிநிதிகள் சபை (கீழவை) என இரு அவைகளைக் கொண்டது. இதில் பிரதிநிதிகள் சபையில் உள்ள 435 இடங்களுக்கும் செனட் சபையில் 100 உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதால், தோராயமாக மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போதைய நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியே சிறிய பெரும்பான்மையுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை என்ற நிலையில், குடியரசுக் கட்சி சரியாக 218 இடங்களையும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி 214 இடங்களையும் கொண்டுள்ளன. அதேபோல, செனட் சபையில் பெரும்பான்மைக்கு 51 இடங்கள் தேவைப்படும் நிலையில், குடியரசுக் கட்சி 53 இடங்களையும், ஜனநாயகக் கட்சி 47 இடங்களையும் தன்வசம் வைத்துள்ளன.அதன்படி, இந்த முறை 435 பிரதிநிதிகள் சபை இடங்களுக்கும், 35 செனட் சபை இடங்களுக்கும், அதேநேரத்தில் பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்கள், உள்ளாட்சிப் பதவிகளுக்குமான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி, நவ. 3 மாலை நடைபெற்றது.அமெரிக்காவில் வெவ்வேறு 6 நேர மண்டலங்கள் இருப்பதால், பல்வேறு இடங்களில் கடந்த சில நாள்களுக்கு முன்பே வாக்குப்பதிவு தொடங்கி, சுமார் 50 சதவீத வாக்காளர்கள் (தபால் வாக்கு உள்பட) வாக்களித்துவிட்டனர். டிரம்ப்பின் குடியரசுக் கட்சியிடமே அதிகாரம் இருக்குமா அல்லது ஜனநாயகக் கட்சி கைப்பற்றுமா என்பதை தீர்மானிக்கும் இந்தத் தேர்தல் முடிவுகள் புதன்கிழமை காலை வெளிவரத் தொடங்கின.ஈரான் விவகாரம் உள்ளிட்ட வெளியுறவுக் கொள்கைகள், விலைவாசி உயர்வு, குடியேற்றப் பிரச்சினை, பொருளாதாரம் ஆகியவை தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தன.வாக்குப்பதிவு நிறைவடைந்த மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல் முடிவுகள், முன்னிலை நிலவரங்கள் வெளியானதில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி முன்னிலை வகித்து வருகிறது. 435 இடங்களுக்கான பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியினர் 91 இடங்களிலும், குடியரசுக் கட்சியினர் 50 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோன்று செனட் சபையில் ஜனநாயகக் கட்சியினர் 45 இடங்களில் வெற்றி பெற்று 7 இடங்களில் முன்னிலையும், குடியரசுக் கட்சியினர் 36 இடங்களில் வெற்றியும் 7 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்.ஜனநாயகக் கட்சி இரு அவைகளையும் கைப்பற்றினால், அதிபர் டிரம்பின் எஞ்சிய 2 ஆண்டுப் பதவிக் காலத்தில் புதிய சட்டங்கள், நிர்வாக முடிவுகளில் பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.Democrats are at an early advantage flipping key seats as results pour in. The outcome will determine which party controls the US House of Representatives and the Senate.